வாடைக் குளிரினிலே
வந்திருக்கும்
பாலமுதே
கோடைப்
பலாச் சுளையைக்
கொண்டு
வாரேன் - கண்வளராய்!
செம்மறியன்
பாலெடுத்து
செந்தேனில்
குலைத்தெடுத்து
அம்மணிகள்
கொண்டுவாரார்
அழாமல்நீர்
கண் ணுறங்கு!!
தோள்
சுமந்து குட்டிகளுடன்
தொல்லிடையார்
குடும்பத்தார்
பாலூட்ட
வாரார்கள்
‘பா’ல் மண(ன)மே! கண்வளராய்!
சிங்கார
வீடின்றி
சின்னஞ்சிறு
முன்னிட்டினில்
வந்ததிரு
மாஞ்சிட்டே
வளர்மதியே,
கண்வளராய்!!
அன்னை
மரி வடிவழகே
அன்புதிர்க்கும்
தேனடையே
பொன்னான
‘மணிப்புரிகள்’
பூரிக்கவே
கண்வளராய்!
பெத்தேலிக
மா மணியே
பேரின்ப
நல்லூற்றே
பெற்றம்நீ
பிறந்த மண்ணில்
பெருமகிழ்ச்சிக்காய்
கண்வளராய்!
பட்டினிலே
தூங்கவைத்தால்
பலதோஷம்
பாயுமென்று
கொட்டிலிலே
தூங்கவைத்தார்
ஈசாயின்
தளிரே கண்வளராய்!
மெத்தையிலே
புரண்டெழுந்தால்
மேனியெல்லாம்
நோகுமென்று
கந்தையிலே
பொதிந்து படுக்கவைத்தாய்
கற்பகமே,
மரிக்கொழுந்தே கண்வளராய்!