அன்பை ஆடையாக்கி
அமைதியை
அணிகலன்களாக்கி
எளிமையை
இயல்பாக்கி
பாசத்தை மனத்தில் தேக்கி...
துணிவைத் துணையாக்கி
தாய்மையை
உறவாக்கி
நன்மையைப்
பொதுவாக்கி
உண்மையைப்
பணிவாக்கி...
தியாகத்தை
உயிராக்கி
மகிழ்ச்சியைப்
பொதுவாக்கி
தாழ்ச்சியை
வழியாக்கி
வாழ்வைத்
தெளிவாக்கி...
வாழ்ந்ததைச்
சரித்திரமாக்கி
மறுக்க
முடியாத உண்மையாக்கி
மனுக்குலத்திற்கு மாதிரியாகி
மகனைச்
சுட்டும் வழிகாட்டியாகி
தாயாய்
தவமாய் தரணிகண்ட
தாயை
வணங்கி
பெருமை
கொள்வோம்!