news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (08.12.2024)

நான் உம்மில் நம்பிக்கை கொண்டுள்ளேன்என இயேசுவை நோக்கி நாம் கூறும் வார்த்தைகளே மிகவும் சிறப்பான செபம்; இதற்கு வேறு வார்த்தைகள் தேவையில்லை.”

- நவ. 22, ‘எக்ஸ்தளப்பதிவு செய்தி

இறை ஒளியில் பிறரை அன்பு செய்து, அவர்களுக்கு உதவ நம்மையே நாம் கொடுப்பவர்களாக மாறுவோம்.”

- நவ 24, கிறிஸ்து அரசர் பெருவிழா மறையுரை

நல்லெண்ணம் கொண்ட ஒவ்வொருவரும் அன்பைப் பரப்பலாம்; வேறுபாடுகளை மதித்து, தேவையிலிருப்பவர்களுக்குத் தங்களை அர்ப்பணிக்கலாம். இச்செயலே நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைக் கவனித்துக் கொள்ள புதிய ஆற்றலை அளிக்கிறது.”

- நவ. 25, ஜெயின் சமய உறுப்பினர்கள் சந்திப்புச் செய்தி

கடந்த கால காயங்கள், தவறான எண்ணங்கள் ஒருபோதும் நம்மை நிலையான அமைதிக்கு இட்டுச்செல்லாது; மாறாக மோதல், போர், வன்முறை, பிரிவினைக்கே நம்மை இட்டுச்செல்லும் என்பதை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.”

- நவ. 25, இளையோருக்கான செய்தி 

ஆண் என்றும், பெண் என்றும் வேறுபாடு இல்லை எனக் கூறப்படுவதற்கான காரணம் மீட்பின் திட்டத்தில் ஆண்-பெண் பாகுபாடு இன்றி, நாம் அனைவரும் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களாக, வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாக இருக்கின்றோம்.”

- நவ. 25, அகாடமியின் உறுப்பினர்கள் சந்திப்புச் செய்தி