news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (22.12.2024)

பகைமையின் சுவர்கள் உடைக்கப்பட்டு, ஒரே கடவுளின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற உணர்வுடன் வாழ வேண்டும்.” 

- டிசம்பர் 07, புதிய கர்தினால்களுக்கு ஆற்றிய உரை.

இசைக் கச்சேரியில் இடம்பெறும் அமைதியான நேரங்கள், இடைவெளிகள், மாற்று ஒலிகள் ஆகிய அனைத்தும் மிக முக்கியம். தேவையற்றவை என எந்த ஒன்றையும் கடவுள் ஒருபோதும் உருவாக்குவதில்லை, ஒவ்வொருவரும் அவரவர் பகுதியை மற்றவர்களுடன் இணைந்து வெளிப்படுத்தவே இவ்வுலகில் அழைக்கப்படுகின்றார்கள்.”

- டிசம்பர் 07, இன்னிசைக் கச்சேரி கலைஞர்கள் சந்திப்புச் செய்தி

சாதாரண சிறிய புறநகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணான மரியா இறைத்திருவுளத்திற்குஆம்என்று பணிந்ததால் வரலாற்றின் மையத்திற்கு அழைக்கப்படுகின்றார்.”

- டிசம்பர் 08, மூவேளைச் செப உரை

அனைவரையும் அணுகக்கூடியதாக இறையியல் இருக்க வேண்டும். பயணத்தை மீண்டும் துவங்கும் இடமாக, தேடும் இடமாக, கண்டறியும் இடமாக இறையியல் இருக்கவேண்டும்.”

- டிசம்பர் 09, வத்திக்கான் பன்னாட்டு இறையியல் மாநாடு

எல்லா வறுமைக்கும் அடிப்படைக் காரணமாக, தாயாக இருக்கும் போரினால் மிக அடிப்படையான உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அப்படி உரிமைகள் பறிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் அமைதிக்கான கூக்குரலிற்கு அரசுத்தலைவர்கள் செவிசாய்க்கட்டும்.”                                  

- டிசம்பர் 10, ‘எக்ஸ்தளப்பதிவு செய்தி