“நாடு
முழுவதும் பழங்குடியினத்தவருக்கு நிலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகம் உள்ளன. தொடர்ந்து பல தலைமுறைகளாகக் காடுகளிலேயே
வசித்து வரும் இந்த மக்களுக்கு காடுதான் வீடாக உள்ளது. இந்த உலகமும், காடும் இறைவன் தங்களுக்கு அளித்தவை என்று நம்பி வரும் அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததால், அவர்கள் வாழும் இடத்தைத் தங்களின் பெயரில் பதிவு செய்து பட்டா பெறுவதற்குத் தவறிவிட்டனர். மேலும், மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் அவர்களுக்கு இல்லை.”
- திருமதி. திரௌபதி முர்மு,
குடியரசுத்
தலைவர்