news-details
உலக செய்திகள்
பன்முகத்தன்மை வேறுபாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்!

நவம்பர் 30-ஆம் தேதி, ஸ்ரீ நாராயண தர்ம சங்கோம் நிறுவனத்தின் சமய மாநாட்டில் கலந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், “சமயங்கள் மக்களின் பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்; மனிதனுக்கிடையே அன்பும் மரியாதையும் வேண்டும்; உலகில் அமைதி மற்றும் ஒருமை உருவாக்க, நாம் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்; மதங்களிடையே நல்லிணக்கம் கொண்டுவர மரியாதை, கண்ணியம், இரக்கம் போன்ற பண்புகளை ஊக்குவிப்பதில் ஒத்துழைக்க வேண்டும்என வலியுறுத்தினார்.