திருத்தந்தை பிரான்சிஸ் 2025 பிப்ரவரி 3 -ஆம் தேதி வத்திக்கானில் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான உலக மாநாடு ஏற்பாடு செய்யப்படுவதாக அறிவித்தார். ‘அன்பு கொடு, பாதுகாப்புக் கொடு’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலிருந்தும் வல்லுநர்களும் விருந்தினர்களும் பங்கேற்பார்கள். இந்த மாநாட்டின் முக்கியக் குறிக்கோள், பல கோடி குழந்தைகள் இன்னும் உரிமைகளற்ற நிலையில் வாழ்ந்து வருவதால், அவர்கள் பாதுகாப்பான, அமைதியான சூழ்நிலைகளில் வளர வேண்டும் என்பதாகும். 2025 -ஆம் ஆண்டு ஏப்ரல் 25, 26, 27 -ஆம் தேதிகளில் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்குமான ஜூபிலி நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவித்தார்.