news-details
உலக செய்திகள்
அருளாளர் கார்லோவுக்குப் புனிதர் பட்டம்

2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று அருளாளர் கார்லோ அகுதீஸ் புனிதராக உயர்த்தப்படுவதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்துள்ளார். இத்தாலியில் பிறந்த அருளாளர் கார்லோ, ஆன்மிகம் மற்றும் தொழில் நுட்பத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். இணையதளத்தில் நற்கருணைப் புதுமைகளைப் பதிவு செய்து, தனது ஆன்மிக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். 15 வயதில் நோயுற்று இறையடி சேர்ந்த இவர், 2020-ஆம் ஆண்டு அருளாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.