news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

இந்தியா என்பது செழுமையான மொழிகளின் நிலமாகும். நாடாளுமன்றத்தில் கூட மக்களவை உறுப்பினர்களின் பேச்சு 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது.  தற்போது மொழிகள் விவகாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றம் கவலை அளிக்கிறது. அனைவரையும் அரவணைத்துச் செல்வதன் அவசியத்தை நமது கலாச்சாரம் வலியுறுத்துகிறது. இந்திய நிலப்பரப்பில் மொழி தொடர்பான மோதல் போக்கு வேண்டுமா? நம் நாட்டின் மொழிகள் ஆழமான ஞானத்துடன் கூடிய இலக்கியச் சுரங்கத்தைக் கொண்டுள்ளன. ஒவ்வோர் இந்திய மொழியையும் வளர்க்க வேண்டியது அவசியம்.”

- உயர்திரு. ஜகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவர்

ஒவ்வொரு மொழியையும் மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்குச் சுமையாகவே அமையும். இதைக் கல்வியாளர்கள்  உள்ளிட்ட அறிவியல் பார்வை கொண்ட பலரும் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை வழியிலான அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் தரம் உயர்ந்தே இருப்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. மாணவர்களின் மீது மொழித்திணிப்பு என்னும் சுமையை ஏற்றாமல், திறன் மேம்பாடு என்கின்ற வாய்ப்பை வழங்க வேண்டும். தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் ஒன்றிய அரசின் இரகசியத் திட்டம். அதை வெளிப்படையாகவே தமிழ்நாடு எதிர்த்து நிற்கும்; வென்று காட்டும்.”

- மாண்புமிகு மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

மொழிக்கொள்கை என்பது வேறு, கல்விக் கொள்கை என்பது வேறு. மொழிக்கொள்கை என்பது அரசின் நிர்வாகத்தோடு தொடர்புடையது. மொழிக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதியை மறுப்பதும், விடுவிக்காமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கது. புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை அடிப்படையில் அமைந்துள்ள பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்க மாட்டோம் என்கிற, இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடித்து வரும் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்து, ஒட்டுமொத்த நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைப்பது ஏற்புடையது அல்ல; 2001- 2006 காலகட்டத்தில் நவோதயாப் பள்ளிகளைத் தமிழ்நாடு ஏற்க மறுத்தபோது, அப்போது இருந்த ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கான நிதியை நிறுத்தவில்லையே! இப்போது மட்டும் ஏன் இந்தப் பிடிவாதம்? இருமொழிக் கொள்கையில் .தி.மு.. உறுதியாக உள்ளது.”

- உயர்திரு. செம்மலை, மேனாள் கல்வி அமைச்சர்