பிப்ரவரி 5 அன்று பெங்களூரு மறைமாவட்டத்தில் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனிதமான நற்கருணையுடன் நற்கருணைப் பாத்திரம் திருடப்பட்டது. இந்நிகழ்வு குறித்து மறைமாவட்டப் பேராயர் பீட்டர் மச்சாடோ தன்னுடைய அறிவிப்பில் “இரவில் அடையாளம் தெரியாத நபர்கள் ஆலயத்திலுள்ள பலிபீடத்தில் வைக்கப்பட்ட நற்கருணை பேழையை உடைத்து நற்கருணைப் பாத்திரத்தைத் திருடியுள்ளனர்” என்றார். மறைமாவட்டத் தகவல் தொடர்பாளர் அருள்பணி. சிரில் விக்டர் ஜோசப், “நற்கருணைப் பாத்திரத்தின் தங்க நிறத்தைப் பார்த்து, அதைத் தங்கம் என நினைத்துத் திருடியிருக்கலாம்” என்றார். மேலும், “காவல்துறை நற்கருணைப் பாத்திரத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்தாலும், திருடப்பட்ட நற்கருணைப் பாத்திரம் மற்றும் அதன் அவமதிப்பு எங்களுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது” என்றார்.