‘உரையாடலின் மூலம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தி மனிதத்தைக் காத்து வரும் மையம் ஒற்றுமையின் ஆலயம்’ என்று பொருள்படுவது ஐக்கிய ஆலயம். 1974-ஆம் ஆண்டு அருள்பணி. இக்னேசியஸ் இருதயம் சே.ச. அவர்களால் தொடங்கப்பட்ட இந்த மையத்தின் பொன்விழா, சென்னை, அருள் கடலில் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாள்களில் ‘உரையாடலை மீட்டெடுப்பது-ஒற்றுமையை அரவணைப்பது’ என்ற தலைப்பில் பல்சமய தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ், தென்னிந்தியத் திரு அவையின் மேனாள் பேராயர் தேவசகாயம், ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதி அரசர் டி. ஹரி பரந்தாமன், ஆற்காடு அறக்கட்டளையின் நிறுவுநர் மற்றும் அறங்காவலர் மாண்புமிகு. இளவரசர் நவாப் சாதா முகமது ஆசிப் அலி, சென்னை மறை மாநிலத் தலைவர் அருள்பணி. செபமாலை ராசா சே.ச., முனைவர் புஷ்பராஜன், முனைவர் ஜேம்ஸ் பொன்னையா எனப் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.
வத்திக்கானில்
உள்ள பல்சமய உரையாடல் துறையின் இயக்குநர் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு சமயங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் உரையாடலின் முக்கியத்துவத்தைக் குறித்து வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். இந்தக் கருத்தமர்வில் முனைவர் ராஜ் இருதயா எழுதியுள்ள ‘The Fiery Word: A Perspectival Approach’, அருள்கடலார் எழுதியுள்ள ‘மக்கள் அனுபவத்தில் மலர்ந்திடும் இறையியலாக்கம்’, முனைவர்
ராபின் சகாயசீலன் எழுதியுள்ள ‘Diving Deep: Engaging Religious Symbols in Interfaith Dialogue’ ஆகிய
மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.
இந்தப்
பொன்விழா பல்சமய தேசியக் கருத்தமர்வை ஐக்கிய ஆலய இயக்குநர் முனைவர் ராஜ் இருதயா, சே.ச. மிகச்
சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.