news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

ஒவ்வொருவருக்கும் அவரவர் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையில் யாரும் தலையிடக் கூடாது. இந்த நடைமுறையை அனைவரும் பின்பற்றினால் மத நல்லிணக்கம் துளிர்க்கும். மதத்தைக் கையில் எடுத்து அதற்கு எதிரான அரசியலை விதைப்பதால்தான் பிரச்சினை வருகிறது. இந்துகளிடம் இசுலாம், கிறித்தவ மதங்களைஅந்நிய மதம்என வேற்றுமைப்படுத்துகின்றனர். சிறுபான்மைச் சமூகத்தினர் மீது வெறுப்பை விதைக்கின்றனர். பிரித்தாலும் சூழ்ச்சியைப் பயன்படுத்தி ஆட்சியில் நீடிக்கப் பார்க்கிறது பா... சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டுமென்றால் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும்.”

- திரு. தொல் திருமாவளவன், மக்களவை உறுப்பினர், தலைவர் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

இந்தியாவில் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் இளைய தலைமுறையினருக்குத் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தற்போது ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அதேவேளையில் பட்டச் சான்றிதழ் மட்டும் அந்த வாய்ப்புகளைப் பெற்றுத் தராது. திறன்கள் இல்லாத சான்றிதழ் வெறும் வெள்ளைத் தாளுக்குச் சமம். மாணவர்கள் தாம் தேர்ந்தெடுத்துள்ள துறையில் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், கற்றுக்கொள்ள வேண்டிய தொழில் நுட்பங்கள் ஆகியவை குறித்து நன்கு புரிந்து கொண்டால், பயணிக்க வேண்டிய பாதை அவர்களுக்குத் தெளிவாகப் புலப்படும். திறன் மேம்பாட்டுக் கல்வி ஒரு நபரின் திறன்களை மேம்படுத்தி, அவரது இலக்குகளை அடைய உதவும்; அது சிறந்த வேலை வாய்ப்புகளையும் பெற்றுத்தரும்.”

- உயர்திரு. குமார் மொலுகரம், துணைவேந்தர் உஸ்மானிய பல்கலைக்கழகம்

வரலாற்றில் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது ஒரு கருத்தியலும் உருவாக்கப்படுகிறது. கல்வி, கருத்தியல், தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. எப்போதும் மக்களிடையே ஒரு பிளவைத் தொழில்நுட்பம் தோற்றுவிக்கும்; அப்போது அங்கு அதிகாரம் உருவாகும். அதிகாரம் படைத்த அறிவுடையவர்கள் தொழில் நுட்பத்தைக் கையாண்டு வரலாற்றிற்கு நிலையான சான்றுகளை உருவாக்குகிறார்கள்.”

- முனைவர் திரு. வைகைச் செல்வன், மேனாள் அமைச்சர்