news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (23.03.2025)

“சாம்பல் நாம் என்னவாக இருக்கிறோம் என்ற நினைவை நம்மில் புதுப்பிக்கிறது, அதேவேளையில், நாம் என்னவாக இருப்போம் என்ற நம்பிக்கையையும் நம்மில் உருவாக்குகிறது.”

- மார்ச் 05, திருநீற்றுப் புதன் மறையுரை

கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக, நாம் மனத்தாழ்மையுடனும் நம்பிக்கையுடனும் தவக்காலத்தின் வழியாகப் பயணிக்க அழைக்கப்படுகிறோம்.”

- மார்ச் 05, திருநீற்றுப் புதன் மறையுரை

நாம் வாழ்கின்ற சமூகம், சந்தைக் கருத்தியல்கள் நிறைந்த சமூகமாக மாறிவிட்டது. தனிநபர் இலாபம் மற்றும் பலன்களை எதிர்பார்த்துப் பணியாற்றும் இச்சமூகத்தில் தன்னார்வலர்களின் பணியானது எதிர்நோக்கின் அடையாளமாகவும், இறைவாக்காகவும் இருக்கின்றது.”

- மார்ச் 09, மூவேளைச் செப உரை

சோதனைக்கு உட்படுத்தப்படும்போது நாம் தனியாக இல்லை; பாலைவனத்தின் வழியாக, வாழ்க்கைக்கான பாதையைக் காட்டும் இயேசு நம்முடன் இருக்கின்றார்.”

- மார்ச் 09, யூபிலி திருப்பலி மறையுரை

இறைமகன் இயேசு பாலைவனத்திற்குச் செல்வது அவர் எத்துணை துணிச்சல் நிறைந்தவர் என்பதை நிரூபிப்பதற்காக அல்ல; மாறாக, அவர் எவ்வளவு வலிமையானவர் என்பதை நிரூபிப்பதற்காக.”

- மார்ச் 09, யூபிலி திருப்பலி மறையுரை