“விடுதலை இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தாமதமாகியுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயமான பலன்களைப் பெறுவதிலிருந்து சுமார் 14 கோடி தகுதி வாய்ந்த இந்தியர்கள் தடுக்கப்படுகின்றனர். எனவே, மத்திய அரசு விரைந்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொண்டு, அந்தப் பலன்கள் தகுதி வாய்ந்த இந்தியர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்பு என்பது சிறப்புரிமை அல்ல; மாறாக, அது அடிப்படை உரிமை!\"
- திருமதி சோனியா காந்தி
காங்கிரஸ் மேனாள் தலைவர்
“கடந்த
ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புத் திட்டங்கள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட
வேலைவாய்ப்புத் திட்டங்களை உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு கட்டமைப்புப் பணிகளுக்காகக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூபாய் 50 இலட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. அதன் மூலம் அதிக இலாபத்தைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் இயற்றி, அதைத் தங்கள் பங்குதாரர்களுடன் பிரித்துக் கொண்டார்களே தவிர, தங்கள் பணியாளர்களுக்குக் கூடுதலாக ஊதியம் ஏதும் வழங்கவில்லை.\"
- எம்.ஆர். சிவராமன்,
மத்திய
வருவாய்த்துறை
மேனாள்
செயலர்
\"ஒன்றிய
அரசு தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் அத்துடன் சேர்ந்து ஏதாவது இந்திய மொழி ஒன்றைக் கற்க வேண்டும் என்று கூறுகிறது. அப்படி இருக்குமாயின் இந்தி பேசக்கூடியவர்கள் எந்தப் பிராந்திய மொழியை மூன்றாவது மொழியாகக் கற்கின்றனர் என்று ஒன்றிய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.\"
- வி.சி.க.
தலைவர்
திருமாவளவன்
எம்.பி.