இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயராக அருள்பணி. ஜான் கார்வாலோ அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 1969- ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று உடுப்பி மறைமாவட்டத்தில் உள்ள மார்கோலியில் பிறந்த அருள்பணி. ஜான் கார்வாலோ, மும்பையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், நிர்மலா நிகேதனில் சமூகப் பணியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 1996- ஆம் ஆண்டு மே 13 அன்று குருத்துவ அருள்பொழிவு பெற்ற இவர் பங்குத்தந்தை, புனித பவுல் ஆலய உதவிப் பங்குத்தந்தை, பள்ளி, கல்லூரிகளின் முதல்வர், மறைமாவட்டச் சமூகப்பணிக் குழுக்களின் பொறுப்பாளர், உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டச் சமூக சேவை சங்கத்தின் இயக்குநர் எனப் பல்வேறு பொறுப்புகளைச் சிறப்பாக ஆற்றியவர். அஜ்மீரில் உள்ள புனித பவுல் பள்ளியின் தலைவராகவும் திறம்படப் பணியாற்றியவர்.