“நமது நான்கு அண்டை மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் கணக்கெடுப்பை நடத்த முதல்வர் தயங்குவது ஏன்? ஆந்திராவில் அனைத்துச் சமூகத்தினருக்கும் தனி வாரியம் உள்ளது; தமிழ்நாட்டிலும் அதுபோன்று அமைய வேண்டும். அப்போதுதான் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் எல்லாச் சமூகத்தினரையும் தூக்கிவிட முடியும்.”
- உயர்திரு. மருத்துவர் இராமதாஸ்,
பா.ம.க. நிறுவனத்
தலைவர்
“கோபப்படுவது
மனிதர்களின் இயல்பு. சினம் கொள்வதை வெவ்வேறு வகையாக வரையறுக்கலாம்; தனிப்பட்ட முறையில் ஒருவர்மீது கொள்ளும் கோபம் முதல் வகை. குறிப்பிட்ட சில நபர்கள் அல்லது குழுவினரிடம் கோபத்தை வெளிப்படுத்துவது இரண்டாம் வகை. மூன்றாவதாக, ஒருவரைப் பழிவாங்கவும் வன்மத்துடன் செயல்படவும் காரணமாக இருக்கும் கொடுங்கோபம். இதைத் தவிர நமது சுயநலத்தின் மீதும் சினம் கொள்வதும் உண்டு. அடுத்தவர்களைப் பாதிக்கும் எந்தக் கோபத்தாலும் பயனில்லை. அதே வேளையில் சமூகத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிரான அறச்சீற்றம் அவசியமானது.”
- உயர்திரு. கோபாலகிருஷ்ண
காந்தி,
மேற்கு வங்க மேனாள்
ஆளுநர்,
மகாத்மா
காந்தியின்
பேரன்
“அறிவியல்
வளர்ச்சியால் மனிதர்களிடையே இடைவெளி அதிகரித்து, தனிமனித ஒழுக்கம் குறைந்து வருகிறது. பெண்களுக்குப் பொருளாதார வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து பாலின சமத்துவம் அடைய வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு எதிரான வன்முறைக்குத் தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும். ‘போக்சோ’ சட்டம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும்.”
- மாண்புமிகு அமைச்சர் பி.
கீதாஜீவன்,
சமூக நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு
அரசு