“ஞானியரின் பயணம் நம்பிக்கை, துணிவு மற்றும் எதிர்நோக்கை அடையாளப்படுத்துகிறது.”
- பிப்ரவரி 19, புதன் பொது
மறைக்கல்வி
உரை
“எதையும் கேட்காமல் கொடுப்பது நம்மை ஒன்றிணைக்கின்றது; மக்களின் நன்மையைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாது ஒன்றித்து இருப்பதை வெளிப்படுத்துகிறது.”
- பிப்ரவரி 23, திருத்தொண்டர்களுக்கான
யூபிலி
மறையுரை
“மன்னிப்பது என்பது, நம்மிலும் நம் சமூகங்களிலும் ஒரு வரவேற்கத்தக்க, பாதுகாப்பான எதிர்காலத்தைத் தயார் செய்வதாகும்.”
- பிப்ரவரி 23, திருத்தொண்டர்களுக்கான
யூபிலி...
“அன்பின் அடையாளமாக இருப்பது என்பது அனைவரையும் அரவணைக்கும் அன்பு கொண்டவர்களாக மாறுவது; தீமையை நன்மையாக மாற்றுவது; உடன்பிறந்த உணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குவதாகும்.”
- பிப்ரவரி 23, ஞாயிறு மூவேளைச்
செபவுரை
“நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் எதிர்நோக்கில் ஒன்றிணைந்து நடைபோடவும் கடவுள் விடுக்கும் அழைப்புக்குச் செவிமடுத்து நம் வாழ்வை மாற்றியமைக்கவும் நல்வாய்ப்பைத் தருகிறது இந்தத் தவக்காலம்.”
- பிப்ரவரி 25, திருத்தந்தையின்
தவக்காலச்
செய்தி