முதுமுனைவர் அருள்பணி. பெலிக்ஸ் வில்பிரட் அவர்களின் ‘தகைசால் செம்மல் விருது’ - இன்றைய தமிழ்நாட்டின் ‘புதிய கமாலியேல்கள்’ என்ற நிகழ்வு கடந்த டிசம்பர் மாதம் 13-ஆம் நாள் வேளாங்கண்ணி திருத்தலத் தியான மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மியான்மர் நாட்டின் முதல் கர்தினாலும் Yangon மறைமாவட்ட பேராயருமான மேமிகு சார்லஸ் போ தலைமை தாங்கினார். தஞ்சை மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு முனைவர் சகாயராஜ் அவர்கள் பங்கெடுத்து, விருந்தினர் அனைவரையும் வரவேற்றார். அருள்முனைவர் R.K. சாமி அவர்கள் இந்நிகழ்வு பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார். மூன்று நிகழ்வுகளை மையப்படுத்தியதாக இவ்விழா அமைந்திருந்தது.
முதலில்,
முதுமுனைவர் அருள்பணி. பெலிக்ஸ் வில்பிரட் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர்கள் பெயரால் இரண்டு பேருரைகள் வழங்கப்பட்டன. ‘New Frontiers of Mission in Asia’ என்ற தலைப்பில் கர்தினால் மேமிகு சார்லஸ் போ அவர்களும், ‘Changing
Scenario and the Evolving Challenging of Ministries in the Church in Tamil Nadu’ என்ற
தலைப்பில் அருள்முனைவர் X.D. செல்வராஜ்
அவர்களும் கருத்துரை வழங்கினர்.
இரண்டாவது
நிகழ்வாக, அருள்முனைவர் R.K. சாமி
அவர்கள் தொகுத்த ‘The Shrines are the Wellsprings of Salvation’ என்ற ஆங்கில நூலும், அருள்முனைவர் கரம்பை S. செபாஸ்டின்
அவர்கள் எழுதிய ‘Ecumenism in the Local Church: Sacraments, Mother Mary, Veneration
of Saints and Joint Action’ என்ற
தமிழ் நூலும் அருள்முனைவர் பெலிக்ஸ் வில்பிரட் அவர்களால் வெளியிடப்பட்டது.
மூன்றாவது,
மிக முக்கிய நிகழ்வாக, உண்மையை உரக்கச் சொல்லி, இறையியலைப் பொதுவெளியில் பேசி, நடைமுறைப்படுத்தியவர்களுக்கு
‘முதுமுனைவர் அருள்பணி. பெலிக்ஸ் வில்பிரட் ‘தகைசால் செம்மல் விருது’ வழங்கி, அவர்கள் இன்றைய தமிழ்நாட்டின் ‘புதிய கமாலியேல்கள்’ எனப்
பெருமைப்படுத்தப்பட்டனர்.
தமிழ்நாடு
சட்டமன்ற சபாநாயகர் திரு. அப்பாவு, தமிழ்நாடு மேனாள் சிறுபான்மை நல ஆணையத் தலைவர்
திரு. பீட்டர் அல்போன்ஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. தாரகை கத்பர்ட், அருள்முனைவர்
மைக்கிள் A. அமலதாஸ்
சே.ச., அருள்பணி. ஜேம்ஸ் பாரதபுத்ரா சே.ச., அருள்முனைவர். X.D. செல்வராஜ்,
அருள்சகோதரி. அன்னை முனைவர் மரிய பிலோமி FBS, தொழிலதிபர்
திருவாளர் அமல்ராஜ், திரு. இலாரன்ஸ், திரு. கிளமென்ட் ஆன்றனி, திரு. ஜோசப் பாண்டியன் ஆகிய 11 நபர்களுக்கு ‘புதிய கமாலியேல்’
விருது வழங்கப்பட்டன.
இந்தச்
சிறப்பு நிகழ்வில் பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்டப் பேராயர் மேமிகு பிரான்சிஸ் கலிஸ்ட், சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பன், கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜீவானந்தம், சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு லூர்து ஆனந்தம், கோட்டாறு மறைமாவட்ட மேனாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், தூத்துக்குடி மறைமாவட்ட மேனாள் ஆயர் யுவான் அம்புரோஸ் மற்றும் 350-க்கும் மேற்பட்ட இறைமக்கள் கலந்துகொண்டனர். விழா நிகழ்வுகள் அனைத்தையும் அருள்முனைவர் R.K. சாமி
வழிநடத்தினார்.