2025-ஆம் ஆண்டின் யூபிலி ஆண்டை 29-ஆம் தேதி உலகெங்கும் ஆயர்கள் தங்களது மறைமாவட்டப் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றித் தொடங்கியுள்ளனர். கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி திருத்தந்தை புனித பேதுரு பேராலயத்தின் புனித கதவுகளைத் திறந்து வைத்து, யூபிலி ஆண்டைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து உலகெங்கும் ஆயர்கள் தங்கள் மறைமாவட்டப் பேராலயத்தில் யூபிலி ஆண்டைத் தொடங்கியுள்ளனர். மக்கள் இந்த யூபிலி ஆண்டில் தங்களது நம்பிக்கையைப் புதுப்பித்துக்கொள்ளவும், நம்பிக்கையை இன்னும் ஆழப்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த யூபிலி ஆண்டில் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட திருப்பயணிகள் வத்திக்கானுக்குப் பயணம் மேற்கொள்வார்கள். 2026 ஜனவரி 6-ஆம் தேதியுடன் யூபிலி ஆண்டு நிறைவுபெறும்.