“எதிர்நோக்கு என்பது இறையியல் பண்பு, இலத்தீன் மொழியில் ‘விர்த்தூஸ்’ அதாவது ‘வலிமை’ என்னும் பொருள்படுகின்றது. அது பண்பு நலன் அல்ல; மாறாக, எதிர்நோக்கு என்பது இறைவனிடமிருந்து வரக்கூடிய ஓர் ஆற்றல்”
- ஜனவரி 11, யூபிலி ஆண்டு
மறைக்கல்வி
உரையின்
முதல்
கூட்டத்தின்
உரை
“தாழ்ச்சியின் வழியாக இவ்வுலகிற்கு வந்த இயேசு கிறிஸ்து, நமக்கான புதிய வழிகளைத் திறக்கின்றார், புதிய பாதைகளை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றார்.”
- ஜனவரி 11, குறுஞ்செய்தி
“குழந்தைகள் மனித குலத்திற்கு மிகப்பெரிய கொடை; நம்பிக்கையின் பரிசு, குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்; நல்ல சூழ்நிலையை உணர வேண்டும்.”
- ஜனவரி 12, வத்திக்கான் நிகழ்வு
“இயேசு வழியாக இறைத்தந்தை தமது முகத்தை இவ்வுலக மக்களுக்கு வெளிப்படுத்தினார். மனிதகுலத்துடனான உரையாடல் மற்றும் உறவிற்குள் நுழைவதற்கான சிறப்புமிக்க இடத்தைக் கடவுள் நிறுவுகிறார்.”
- ஜனவரி 12, மூவேளைச் செப
உரை
“மனிதர்களாகவும் அரசியல் சமூகங்களாகவும் நம்மை இணைத்து வைத்திருக்கும் உறவுகள் குறித்து நாம் மீண்டும் எண்ணிப் பார்ப்பதற்கு இந்த யூபிலி ஆண்டு கிறித்தவர்களுக்கும் கிறித்தவரல்லாதவர்களுக்கும்
ஏற்ற வாய்ப்பை வழங்குவதாக அமையட்டும்.”
- ஜனவரி 14, ‘எக்ஸ்’ தளப்பதிவு