“ஒவ்வொரு
சொல்லிலும் ஒரு வரலாறு வாழ்கிறது; ஒரு பண்பாடு வாழ்கிறது; ஒரு கனவு வாழ்கிறது. ஒவ்வொரு சொல்லிலும் அந்தச் சொல் தோன்றிய நிலத்தின் மண் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அந்த மண்ணின் ஒரு துளியைக்கூடச் சிந்தாமல் சிதறாமல், அப்படியே அள்ளி மற்றொரு நிலத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஒரு மனத்தில் இருந்து மற்றொரு மனத்துக்கு, ஒரு பண்பாட்டில் இருந்து மற்றொரு பண்பாட்டுக்கு, ஒரு வரலாற்றில் இருந்து மற்றொரு வரலாற்றுக்கு, ஓர் உலகில் இருந்து மற்றோர் உலகுக்கு. அதே அழகு, அதே கனம், அதே வாசம், அதே உணர்வு, அதே மகிழ்ச்சி, அதே துக்கம், அதே ஏக்கம், அதே வலி ஓர் இதயத்திலிருந்து மற்றோர் இதயத்துக்குச் சென்றாக வேண்டும். நேர்மையாகவும் அழகாகவும் பார்க்க மிக எளிதாகத் தோன்றினாலும் ஒவ்வொரு சொல்லும் கனமானது. அந்தக் கனத்தைச் சுமந்துசெல்லும் வலுவை ஒரு மொழிபெயர்ப்பாளர் பெற வேண்டும்.”
- திரு. ஏ.கே.
இராமானுஜன்,
மொழியியல் அறிஞர், ஆய்வாளர்,
பேராசிரியர்,
எழுத்தாளர்,
மொழிபெயர்ப்பாளர்