நம் வாழ்வின் நன்றிக்குரியோர்
நம்
வாழ்வின் வாரந்தோறும் ஞாயிறு திருப்பலியில் மக்களைச் சந்தித்து திருப்பலி நிறைவேற்றவும், ‘நம்
வாழ்வு’ வார
இதழ் பற்றிக் கூறி சந்தாதாரர்களை உருவாக்கவும், மறைமாவட்டப் பங்குகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிக்குப் பேராதரவு தரும் பங்குத்தந்தையர் ஒவ்வொருவருக்கும் ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணிக்குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சிறப்பான நன்றிக்குரியோர்!
தம்
பங்கு மக்களை ‘நம் வாழ்வு’ வார இதழில் வாசகர்களாகவும் சந்தாதாரர்களாகவும் மாற்றும் வண்ணம், வாசிப்பு, வார இதழ் தயாரிப்பின் சிறப்புகள் - சிரமங்கள், ‘நம் வாழ்வு’ இதழின் தனித்துவம், குழந்தைகளை வாசிக்க ஊக்குவித்தல், ‘நமது இதழுக்கு நாம்தான் ஆதரவு அளிக்க வேண்டும்’
என விழிப்புணர்வு கொடுத்து 50 சந்தாதாரர்களைப் பெற்றுத் தந்த சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம் புழல் புனித அந்தோணியார் ஆலயப் பங்குத்தந்தை அருள்பணி. Y.F. போஸ்கோ
அவர்களுக்கும், 52 சந்தாக்களைப் பெற்றிட உதவிய செங்கல்பட்டு மறைமாவட்டம் சேலையூர், புனித சூசையப்பர் ஆலயப் பங்குத்தந்தை அருள்பணி.
தாமஸ்
பிரேம்குமார்
அவர்களுக்கும் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- முதன்மை ஆசிரியர்