news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (19.01.2025)

ஏழைகளை, நோயாளிகளை, துன்புறுவோரைச் சந்தித்து, நாம் அவர்களோடு இருக்கும்போது கிறிஸ்துவுக்கே பணியாற்றுகிறோம். இவ்வுலகில் பணியாற்ற வந்த கிறிஸ்துவின் திராட்சைக் கிளைகளாகிய நாம், அந்தப் பிறரன்புப் பணிகளைச் செய்பவர்களாக இருக்க வேண்டும்.” 

- ஜனவரி 03, நற்செய்திப் பணியாளருக்கான செய்தி

கடவுளின் கற்பித்தலுக்கு மையமாக இருப்பது குடும்பம். குடும்பத்தில் உரையாடல் இல்லாமல் அலைப்பேசி கெடுத்து விடுகின்றது. குடும்பத்தில் உரையாடல் முக்கியமானது; அவ்வுரையாடலே நாம் வளர உதவுகின்றது.”

- ஜனவரி 04, பெற்றோர்க்கான செய்தி

விண்மீன் தனது ஒளியால் ஞானிகளைப் பெத்லகேமுக்கு அழைத்துச் சென்றதுபோல, நாமும் நமது அன்பால், நாம் சந்திக்கும் மக்களை இயேசுவிடம் அழைத்து வருபவர்களாக இருக்க வேண்டும்.”

- ஜனவரி 06, திருக்காட்சிப் பெருவிழா மறையுரை

இன்றைய உலகில் பல சவால்கள் மற்றும் முரண்பாடுகளை நாம் எதிர்கொண்டாலும், கடவுள் நம்மை அடைவதற்கான வழிகளை ஒருபோதும் நிறுத்த மாட்டார். முன்னோக்கிச் செல்வதற்கான முதல் அடியினை எடுக்க நாம் ஒருபோதும் தயங்க வேண்டாம்; அஞ்சவேண்டாம்.” 

- ஜனவரி 05, புதிய ஆண்டின் முதல் மூவேளைச் செபவுரை

இறைவனைச் சந்திப்பதற்கு உதவும் ஒளியாக நாம் ஒருவருக்கொருவர் இருக்கவேண்டும். இறைமகனைச் சந்திப்பதற்காகப் பல்வேறு தடைகளைத் தாண்டி வந்த ஞானிகள் போல நாமும் இயேசுவைக் காண முயலவேண்டும்.”

ஜனவரி 06, ‘எக்ஸ்தளப்பதிவு