“வளரிளம்
பருவம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான, இன்றியமையாத வளர்ச்சிக் கட்டம். ஒருவர் தனது சமூகத்திறன், உணர்வு ரீதியான புரிதல், மீளும் திறன் (Resilience) ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளக்கூடிய முக்கியமான பருவமும் இதுதான். ஆரோக்கியமான தூக்கம், சீரான உடற்பயிற்சி, சக மனிதர்களை உணர்வுபூர்வமாகப்
புரிந்துகொள்ளுதல், பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறன் போன்ற ஆரோக்கியமான மனநலப் பழக்கங்கள் இந்தப் பருவத்தில்தான் வளர்த்தெடுக்கப்படுகின்றன.”
- டாக்டர் கார்த்திக் தெய்வநாயகம்