“மாசில்லாக் குழந்தைகள் அனைவருக்காகவும் செபிப்போம். பசி, போர், வன்முறை இவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் அனைவரும் பாதுகாக்கப்படவும் ஆதரிக்கப்படவும் இறைவனின் உதவியைக் கேட்போம்.”
- டிசம்பர் 28,
மாசில்லாக்
குழந்தைகள்
திருவிழா
குறுஞ்செய்தி
“எதிர்நோக்கு மற்றும் இரக்கச் செயல்கள் நிறைந்த உலகம் அழகானது; எதிர்நோக்கு மற்றும் இரக்கச் செயல்கள் நற்செய்தியின் இதயத்தைத் தொட்டு, நல்வாழ்விற்கு வழிகாட்டும் வழியைச் சுட்டிக்காட்டுகின்றன,.”
- டிசம்பர் 28,
BBC
செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செய்தி
“குடும்பம் என்பது சமூகத்தின் உயிரணு. அது ஆதரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய விலைமதிப்பற்ற
புதையல்.”
- டிசம்பர்
29, மூவேளைச் செப
உரை
“கிறிஸ்து பிறப்புக் காலத்திற்குள் நாமும் இடையர்களைப்போல அவர் அருகில் செல்வோம். நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படியே நம்மை இயேசுவிடம் கொண்டுவருவோம். கடவுளால் அன்பு செய்யப்படுதலே உண்மையான அழகு என்பதை உணர்வோம்.
- டிசம்பர் 30, திருத்தந்தையின்
குறுஞ்செய்தி
“இறைவனின் தாயான மரியா இயேசுவுடனான நமது உறவை வலுப்படுத்துகின்றார். நம்மை அவரிடம் மீண்டும் கொண்டு சேர்க்கின்றார். அவரைப்பற்றி நம்மிடம் எடுத்துரைத்து, அவரிடமே நம்மை அழைத்துச் செல்கின்றார்.”
- ஜனவரி 1, ‘கன்னி மரியா
இறைவனின்
தாய்’ பெருவிழா மறையுரை