சத்தீஸ்கரின் பழங்குடிக் கிறித்தவர்கள் இந்து மதத்திற்குத் திரும்ப வேண்டுமென இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்ததுடன், கிறிஸ்துமஸ் விழாவும் கொண்டாடக் கூடாது என்று எச்சரித்துள்ளன. டிசம்பர் 24 அன்று அங்கு கிறித்தவர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. காவல்துறையினர் இது குறித்து விசாரித்து, கிறித்தவர்களுக்கு எதிரான குற்றங்களைப் பதிவு செய்துள்ளன. கடந்த ஒன்பது மாதங்களில் சத்தீஸ்கரில் கிறித்தவர்களுக்கு எதிராக 127 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.