news-details
உலக செய்திகள்
முதல் முறை சிறையில் புனிதக் கதவு திறப்பு!

உரோமையில் உள்ள ரெபிபியாவின் சிறையில் புனிதக் கதவை டிசம்பர் 26 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் திறந்து வைத்துத் திருப்பலி நிறைவேற்றினார். அப்போது புனித ஸ்தேவானின் வாழ்க்கையை எடுத்துக் காட்டி, மன்னிப்பும் சுதந்திரமும் பற்றிய மறையுரையை வழங்கிய அவர், சிறை வாழ்க்கையில் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். இயேசு மற்றும் புனித ஸ்தேவானின் வாழ்வைச் சுட்டிக்காட்டி, நம்பிக்கை மற்றும் மன்னிப்பின் சக்தி மூலம் நமது சுதந்திரத்தை மீட்க முடியும் என திருத்தந்தை உறுதியளித்தார். குறிப்பாகஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும் (திபா 7:60) என்ற ஸ்தேவானின் வார்த்தைகளை எடுத்துக்கொண்டு, மன்னிப்பின் வழியாக உண்மையான சுதந்திரம் கிடைக்கும் எனத் தெரிவித்தார். இந்த யூபிலி ஆண்டின் ஆரம்பத்தில், மன்னிப்பும் சுதந்திரமும் நம்மை அழைத்துச் செல்கின்றன என அறிவித்தார். இயேசு நம்முடைய போராட்டங்களை அறிந்தவர், அவர் நம்முடன் இருக்கிறார் எனத் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.