வத்திக்கானில் ஜனவரி 4 அன்று துறவிகளுக்கான நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் “துறவிகளுக்கான தூய்மையின் நிலையான அர்ப்பணிப்பு, தீவிர இறையியல் தயாரிப்பு மற்றும் இணக்கமான வாழ்க்கை முறை அவசியம்” என்றார். மேலும், வருத்தம் கொண்ட முகம் உள்ளவர்களாக அருள்சகோதரிகள் இருத்தலாகாது; எல்லாருடனும் அன்பான உறவு கொள்பவராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தூய்மையான வாழ்க்கை, தயாரிப்பு மற்றும் இணக்கமான உறவுகள் துறவிகளுக்குத் தேவையானது. இறை அழைத்தல் குறைந்து வரும் சூழலில், தூய்மையான வாழ்க்கை, தயாரிப்பு, இணக்கமான உறவுகள் கொண்டு வாழுங்கள்” என்று தெரிவித்தார் திருத்தந்தை.