உரோமின் புனித பவுல் பெருங்கோவிலில் புனிதக் கதவு ஜனவரி 5 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் திறக்கப்பட்டது. இது கிறிஸ்துவின் மீட்பின் பாதையைக் குறிக்கும் சின்னமாக அமைந்தது என்றார் திருத்தந்தை. திருப்பலிக்குத் தலைமையேற்ற கர்தினால் ஜேம்ஸ் மைக்கேல் ஹார்வி, “இயேசு இரத்தம் சிந்தி, நம்முடைய பாவங்களை மன்னித்ததால், நாம் கடவுளின் பிள்ளைகளாகத் தத்தெடுக்கப்பட்டுள்ளோம்” என்றார். யூபிலி ஆண்டின் மூலம் மனிதர்களுக்கு எதிலும் ஏமாற்றம் தராத எதிர்நோக்கை வழங்குவதாகவும், எதிர்நோக்கு வெறும் விருப்பம் அல்ல; அது கடவுளின் வாக்குறுதிகளின் மீது உறுதி கொண்ட நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றது; இந்த யூபிலி ஆண்டில் நம்பிக்கையை விதைப்பவர்களாக இருப்பதற்கான அருமையான காலம் என்றும் கர்தினால் ஹார்வி எடுத்துரைத்தார்.