news-details
இந்திய செய்திகள்
சிறுபான்மை வழிபாட்டுத் தளங்களை மாநில அரசு கட்டுப்படுத்த முயற்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து மதங்களின் வழிப்பாட்டுத் தளங்களையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளாக்கும் அரசின் புதிய முன்மொழிவுக்குக் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ் மற்றும் கிறித்தவத் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். இந்தப் புதிய முன்மொழிவானது இந்திய அரசு கிறித்தவ வழிபாட்டுத் தளங்கள் மற்றும் சொத்துகளை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளாக்கும் முயற்சியாகும். இந்தத் திட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் கொடுத்த மதச் சுதந்திரத்திற்கு முரணானது என்று தெரிவித்தார் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ். இந்த முன்மொழிவு பற்றி மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் தலைவர் இராகுல் நார்வேகார் கூறும்போது, “இந்தியாவின் பல்துறை அமைப்பு அனைத்து மதங்களையும் சமமாகக் கையாள வேண்டும்என்று கூறினார். ஆனால், கிறித்தவத் தலைவர்கள் இந்தப் புதிய முன்மொழிவை நிராகரித்தனர்; இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்கள்.