திருத்தந்தை பிரான்சிஸ், உலகக் குழந்தைகளுக்கான மறைப்பணி நாளான திருக்காட்சிப் பெருவிழாவில், ‘எல்லாரையும் விருந்திற்கு அழைத்து வாருங்கள்’ என்ற மையச்செய்தியை வலியுறுத்தினார். ஜனவரி 6-ஆம் தேதி வத்திக்கானில் திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளைச் செப உரையில், உலகெங்கும் உள்ள குழந்தைகள், இளையோருக்கான செபங்கள் மற்றும் ஒற்றுமை நடவடிக்கைகள் முன்னேற்றத்துக்கு ஊக்கமளிப்பதாகக் கூறினார். அமேலியா சமூகத்தாருக்குப் பாரம்பரிய முறைப்படி வத்திக்கான் வளாகத்தை அழகுபடுத்தியதற்காக நன்றி கூறினார். போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான செபங்களை முன்வைத்தார்.