news-details
உலக செய்திகள்
அன்னை மரியாவின் பசிலிக்கா புனிதக் கதவு திறப்பு

2025-ஆம் ஆண்டு யூபிலி ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு புனித மேரி மேஜரின் புனிதக் கதவு  டிசம்பர் 29 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கர்தினால் ரோலண்டாஸ் மக்ரிகாஸ் அவர்கள், பசிலிக்காவின் ஆன்மிக முக்கியத்துவத்தை விவரித்து, நம்பிக்கையாளர்களைப் புனிதப் பயணத்திற்கு அழைப்பு விடுத்தார். அன்னை மரியாவின் வழிகாட்டுதலுடன், திருப்பயணிகள் ஆழ்ந்த ஆன்மிகப் பயணத்தை அங்குத் தொடங்கியுள்ளனர். யூபிலி ஆண்டான இந்த அருளின் காலத்தில், நம்பிக்கையின் பாதையைத் தொலைக்காமல் தொடரும்படி அனைத்து நம்பிக்கையாளருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.