“செபம் நமது இதயத்தைத் தூய்மையாக்குகின்றது; அதன் பார்வையை ஒளியூட்டுகின்றது, எதார்த்தத்தை அதன் ஒரு நிலையிலிருந்து மாற்றி, மறுநிலையிலிருந்து பார்க்க நமக்கு அழைப்பு விடுக்கின்றது.”
- டிசம்பர் 16, செப ஆண்டு
‘எக்ஸ்’ தளப்பதிவு
“தங்களது குற்றங்களைக் கண்டறிந்து களைய முற்படுபவர்கள், சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையிலிருந்து விடுபட்டு, இதயங்களின் ஒற்றுமையை உருவாக்கும் ஒரே கடவுளின் செயலுக்கு இடமளிக்கிறார்கள்.”
- டிசம்பர் 21, உரோம் கியூரியா
சந்திப்புச்
செய்தி
“இம்மண்ணில் பிறக்கும் எந்த ஒரு குழந்தையும் ஒரு தவறு அல்ல; மாறாக, வாழ்வின் கொடை; ஆகவே, எலிசபெத்தைப் போல வயிற்றில் குழந்தையைச் சுமந்து ஆவலுடன் காத்திருக்கும் கருவுற்ற தாய்மார்களின் அழகை வியந்து போற்றுவோம்; இறைவனுக்கு நன்றி கூறுவோம்.”
- டிசம்பர் 22, வத்திக்கான் மூவேளைச்
செப
உரை
“யூபிலி என்பது தனி மனிதர்களாகவும் சமூகமாகவும் நாம் நமது வாழ்க்கையின் பொன்னான நேரங்களைக் கணக்கிடுவதற்கான காலம்; இது தூய ஆவியாரின் குரலுக்குச் செவிமடுத்து வாழ்வதற்கான அழைப்பின் காலம்.”
- டிசம்பர் 23, ‘எக்ஸ்’ தளப்பதிவு
“இயேசுதாம் அமைதியின் கதவு. பலமுறை நாம் அந்தக் கதவின் நுழைவாயிலில்தான் நிற்கிறோம். ஆனால், அதைக் கடக்க நமக்குத் துணிவு இல்லை, ஏனென்றால் அது நம் வாழ்க்கையை ஆன்ம பரிசோதனை செய்துபார்க்க நமக்குச் சவால் விடுகிறது.”
- டிசம்பர் 25, Urbi
et Orbi