டிசம்பர் 27 அன்று ஒடிசா மாநிலத்தில் கோபிந்த சிங் என்பவர் தனது வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நடத்திக்கொண்டிருந்தபோது, சில நபர்கள் வந்து ‘மதமாற்றம் நடைபெறுகின்றது’ என்று தவறாகச் குற்றஞ்சாட்டி அங்கிருந்தோரைத் தாக்கியுள்ளனர். கிறித்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்த இந்த வன்முறை நிகழ்வு பலரையும் கவலை அடையச் செய்துள்ளது, இது நாட்டின் அரசியலமைப்பின்படி உறுதி செய்யப்பட்ட மதச் சுதந்திரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிறித்தவர்களின் பாதுகாப்பு மற்றும் மதச் சுதந்திரம் குறித்து கவலை தெரிவித்து, உள்ளாட்சி அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.