நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியான அனம்பிரா மாநிலத்தில் உள்ள அமல உற்பவ அன்னை சபையைச் சேர்ந்த அருள்சகோதரி மரியா மற்றும் அருள்சகோதரி கிரேஸ் ஆகியோர் சனவரி 7 அன்று கடத்தப்பட்டதாக ‘Fides’ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இருவரும் ஓக்போஜியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிக் கொண்டிருந்தபோது சாலையில் ஆயுதமேந்திய நபர்கள் அவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். இரண்டு அருள்சகோதரிகளையும் மீட்பதற்காகக் காவல்துறை கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கை தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.