“மரக்கன்றுகள்
வளர்த்தல், பறவைகளுக்கு இரை வைத்தல் உள்ளிட்ட கல்விக்கு அப்பாற்பட்ட அறம் சார்ந்த செயல்களில் குழந்தைகள் ஈடுபட வேண்டும். விபத்தில் சிக்கிய ஒருவருக்கு உதவக்கூட மனமில்லாமல் அதைக் கடந்து போகிறோம். நேர்மறை எண்ணங்கள் மக்களிடம் குறைந்துகொண்டே வருகின்றன. ஒருவர் வெற்றிகரமான, மகிழ்ச்சியான மனிதராக உருவாக, நற்சிந்தனை மிகவும் அவசியமாகும். நற்சிந்தனை கொண்ட மாணவர்கள் நிறைய பேர் உருவாக வேண்டும்.”
- திருமதி. கி. சாந்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர்