news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (05.02.2025)

அருள்பணித்துவ மாணவர்கள், உண்மையான உள்மனச் சுதந்திரம் உள்ளவராக, மனித உறவுகளுக்குத் தகுதியான, சமநிலையான பக்குவம் அடைந்தவராக, மென்மை, உடனிருப்பு, இரக்கம் என்னும் கடவுளின் பண்பு கொண்டவராக, மறைப்பணி ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்.”

- ஜனவரி 25, குருமட அதிபர் மற்றும் குருமாணவர்கள் சந்திப்புச் செய்தி

நாம் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கை ஒரு விலைமதிப்பற்ற கொடை. நாம் கொண்டாடும் யூபிலி ஆண்டானது, வெறும் வரலாற்று நினைவாக மட்டுமல்லாமல், நம்மிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையைக் காணும் உறுதிப்பாடாகக் கொண்டாடப்பட வேண்டும்.”

- ஜனவரி 25, புனித பவுல் பெருங்கோவிலில் வழங்கிய மறையுரை

அனைத்தையும் இழந்துவிட்டதாகத் தோன்றினாலும் அதில் மறைந்திருக்கும் நன்மையின் துகள்களைத் தேடுங்கள்; எதிர்நோக்கிற்கு நேர்மாறான அவநம்பிக்கைச் சூழலிலும் எதிர்நோக்கைத் தேட அனுமதியுங்கள்.”

- ஜனவரி 26, சமூகத்தொடர்பாளர் நாளுக்கான குறுஞ்செய்தி

உடன்பிறந்த உணர்வு, மன்னிப்பு மற்றும் அமைதியின் வழியில் அனைவருக்கும் திறந்த இதயத்தைக் கொண்டிருக்க இளைஞர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும். இதன் வழியாக, சகோதரத்துவ மற்றும் நீதியான உலகத்தை ஒன்றாகக் கட்டியெழுப்ப வேண்டும்.”

- ஜனவரி 26, ஞாயிற்றுக்கிழமை மூவேளை செபவுரை.

துன்பத்தை அனுபவிக்கும் மக்கள் வாழும் இடங்கள் பெரும்பாலும் பகிர்வின் இடங்களாக இருக்கின்றன; அங்கு நாம் ஒருவரை ஒருவர் ஊக்கமூட்டி வளப்படுத்தி நம்பிக்கையோடு இருக்க வலியுறுத்த வேண்டும்.”

- ஜனவரி 27, 33-வது  உலக நோயுற்றோர் தினத்திற்கான (பிப்ரவரி 11) செய்தி