“சமூகத்தில் தொழில்நுட்பங்கள் பெரும் தாக்கங்களை உருவாக்குவதால் விளிம்புநிலை மக்கள் குறித்து நாம் தொடர்ந்து அக்கறை கொள்ள வேண்டும். தொழில்நுட்பங்களால் உருவாக்கப்படும் மகத்தான வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; தொழில்நுட்ப மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும்.”
- மாண்புமிகு. திரௌபதி முர்மு,
குடியரசுத் தலைவர்
“இந்தியா
திறமை மிகுந்த இளைஞர்களைக் கொண்டுள்ளது; அந்த வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான தெளிவான தொலைநோக்குத் திட்டமே இந்தியாவுக்குத் தேவை. நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கக்கூடிய மற்றும் எதிர்காலத்தில் முன்னணி நாடாக இந்தியா உருவெடுக்கும் வகையிலும், உண்மையான தொழில் துறை சக்தியைக் கட்டமைப்பதற்கான தெளிவான தொலைநோக்குத் திட்டம் தேவை. வெற்று வார்த்தைகள் இந்தியாவுக்குத் தேவையில்லை.”
- திரு. இராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்
“இயல்,
இசை, நாடகம் என்ற முத்தமிழ்ச் சுவையில், தமிழ் நாடகம் என்பது மிகுந்த வரலாற்றுச் சிறப்பு கொண்ட கலை வடிவம். பொழுதுபோக்கு அம்சங்கள் அபரிமிதமாகப் பெருகிவிட்ட சூழலில் பழம்பெரும் கலையான நாடகக்கலை நசிந்து வருகிறது. எனவே, நாடகக் கலையின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துக் கூறி அதை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் ‘உலக நாடக தினம்’ ஆண்டுதோறும் மார்ச் 27- அன்று கொண்டாடப்படுகிறது. சீனாவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டிருக்கும் ‘சர்வதேச நாடக நிறுவனம்’
1961-ஆம் ஆண்டு முதல் இந்தத் தினத்தைக் கொண்டாடுகிறது. உலகமெங்கும் உள்ள நாடக ஆசிரியர்களும் நாடகக் குழுக்களும் இரசிகர்களும் இதை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும்.”
- திருமதி. தாரிணி கோமல்,
நாடக இயக்குநர்