“பல குணநலன்கள், விருப்பங்கள், கொடைகள், மற்றும் வரங்களை நமக்காக அல்ல; மாறாக, பிறருக்காகவே கடவுள் நம்மில் வைத்திருக்கின்றார்.”
- பிப்ரவரி 07, ஸ்பெயினின் தேசிய
இறையழைத்தல்
மாநாடு
உரை
“நமது குடும்பங்கள், சகோதரத்துவ அமைப்புகள், தலத்திரு அவைகள், பங்கு ஆலயங்கள், நோயாளிகள் மற்றும் முதியவர்கள் வாழுமிடங்கள் என அனைத்து இடங்களிலும்
அன்பின் செயல்கள் எதிரொலிக்கப்பட வேண்டும்.”
- பிப்ரவரி 08, திருப்பீடத்தின்
மாநாட்டு
உரை
“நாட்டின் இராணுவப் பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொள்பவர்கள் அனைவரும், மக்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலைக்கான முகவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ள வேண்டும்.”
- பிப்ரவரி 09, திருப்பலி மறையுரை
“எந்த ஒரு புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் பொது நலனுக்குப் பலன் தருவதாக இருக்க வேண்டும்; அது மனிதப் படைப்பாற்றலைக் கட்டுப்படுத்துவதாக இருக்கக்கூடாது.”
- பிப்ரவரி 11, ‘செயற்கை நுண்ணறிவு
நடவடிக்கை
உச்சி
மாநாடு’ உரை
“நோயுற்றோரும் நோயுற்றோரிடையே சேவையாற்றுவோரும் இணைந்து பயணிப்பது அனைவருக்குமான ஓர் அடையாளம், மனித மாண்பிற்கான ஒரு கீதம் மற்றும் எதிர்நோக்கின் ஒரு பாடல்.”
- பிப்ரவரி 11, ‘எக்ஸ்’ தளப்பதிவு