ஐந்தாவது உலக தாத்தா-பாட்டிகள் தினத்திற்கான தலைப்பாக “நம்பிக்கை தளராதோர் பேறுபெற்றோர்” (சீரா 14:2) என்ற வார்த்தையைத் திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜூலை 27 -ஆம் தேதி சிறப்பிக்கப்படவுள்ள இந்த நாளில், முதியோர் குடும்பங்களில் மற்றும் திரு அவை சமூகங்களிலும் நம்பிக்கையின் அடையாளமாகப் பார்க்கப்படுவார்கள். 2021 -ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் துவக்கிய தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தினம், தலைமுறைகள் இடையே இணக்கம் மற்றும் சந்திப்பை ஊக்குவிப்பதாக அமைந்திருக்கிறது.