news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது; முந்தைய ஆண்டை விட பொருளாதார வளர்ச்சி மேலும் இரண்டு சதவிகிதம் சரிய வாய்ப்புள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை; வேலை வாய்ப்பு இல்லாத இளையோர்களின் விகிதம் 40 சதவிகிதத்தை நெருங்கி உள்ளது. இளைஞர்களுக்குப் பிரதமர் மோடி அவ்வப்போது வழங்கும் பணி நியமனக் கடிதங்கள் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறதே தவிர, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் வருமானத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளது; உணவு, கல்வி, சுகாதாரப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.”

- உயர்திரு. சிதம்பரம், மேனாள் மத்திய நிதி அமைச்சர்

ஒவ்வொரு சமுதாயமும் தமக்கான வரலாற்று ஆவணங்களைப் பதிவு செய்வது அவசியம். ஐரோப்பிய நாடுகள் பல நூறு ஆண்டுகளாகத் தமக்கான சிறந்த வரலாற்று ஆவணங்களைப் பதிவு செய்துள்ளன. ஆயினும், தமிழ்ச் சமுதாயம் இலக்கியத்தில் சிறந்து விளங்கினாலும், வரலாற்று ஆவணங்களைக் குறைவாகவே கொண்டுள்ளது. இலக்கியங்களைத் தமிழ் மொழியின் 4000 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அறிவியல் பூர்வமாக நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. வரலாற்றை ஆதாரப்பூர்வமாகக் கண்டறிவதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும்.”

- உயர்திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு

தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவதால்தான் திருக்குறள் ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கிறது. திருவள்ளுவரின் சமகாலத்தவர்களான அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்றோர் பல தத்துவங்களைக் கூறினார்களே தவிர, தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தவில்லை. அதனால்தான் காலத்தை வென்று வள்ளுவம் நிலைத்து நிற்கிறது.”

- திருமதி. டாக்டர் சுதா சேசய்யன், செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவர்