திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி புதிய பேராயர் மற்றும் மூன்று துணை ஆயர்களை நியமித்துள்ளார். ஆயர் உடுமாலா பாலா ஷோரெட்டி அவர்களை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தின் பேராயராக நியமித்துள்ளார். அருள்பணி. த. செல்வராஜன் அவர்களை கேரளாவின் நெய்யாற்றின்கரா வாரிசுப் பேராயராக நியமித்துள்ளார். இவர் 2019 முதல் திருப்புரம் புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தில் பங்குத்தந்தையாகப் பணியாற்றியவர். அருள்பணி. பினர்டு லாலோ அவர்களை ஷில்லாங் பேராயத்தின் வாரிசுப் பேராயராக நியமித்துள்ளார். இவர் ஏப்ரல் 30, 2006 அன்று குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியின் மறைமாவட்ட ஆயராக அருள்பணி. ஃபேபியன் டோப்போ நியமிக்கப்பட்டுள்ளார்.