news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (02.03.2025)

நிலம், நீர் மற்றும் உணவு ஆகியவை வெறும் பொருள்கள் அல்ல; மாறாக, அவை வாழ்க்கையின் அடிப்படை மற்றும் இயற்கையோடு உள்ள மக்களின் பிணைப்பு.”

- பிப்ரவரி 10, பூர்விக மக்களின் உரிமைக்கான செய்தி

 “போர்களால் குழந்தைகள் அழிந்துவரும் வேளையில், இசை என்பது அமைதிக்கான கருவியாக அமைகிறது. மேலும், நீதியான மற்றும் உடன்பிறந்த உறவுக்கான உலகத்தை ஊக்குவிக்கக்கூடிய ஓர் உலகளாவிய மொழியாக இசையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” 

- பிப்ரவரி 11, இசை விழாவிற்கான  செய்தி

இயேசுவின் பிறப்பிற்கு முதல் சாட்சிகளாக இருப்பவர்கள் இடையர்கள். இவர்கள் விலங்குகளுடனேயே பயணித்து அதனுடனேயே இருப்பதால் துர்நாற்றம் கொண்டவர்கள். சமூகத்தின் விளிம்புகளில் வாழ்பவர்களாக இருந்தாலும், அவர்களே எதிர்நோக்கின் முன்மாதிரிகள்.” 

- பிப்ரவரி 12, யூபிலி ஆண்டிற்கான சிறப்பு மறைக்கல்வி உரை

கிறிஸ்துவின் உடலில் சகோதர-சகோதரிகளாக ஒன்றிணைந்துள்ள அனைவரின் குடும்பமும், அனைவருக்கும் சமமாகப் பரிமாறப்படும் ஆன்மிக உணவான நற்கருணையால் உறுதிபெற வேண்டும். இது நம்மைக் கடவுளோடும், ஒருவர் மற்றொருவருடனும் ஒன்றிணைக்க வழிவகுக்கிறது.”

- பிப்ரவரி 14, திருப்பயணிகள் சந்திப்புச் செய்தி

உலகளாவிய மொழியாகிய கலையின் முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்து, அதன் அழகை மக்களிடத்தில் பரவச் செய்து, அவர்களை ஒன்றிணைத்து, உலகிற்கு நல்லிணக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.”              

- பிப்ரவரி 16, மூவேளைச் செபவுரை