இந்தியில் வெளியிடப்பட்ட ‘சனாதனி - கர்மா ஹி தர்மா’ படம் கிறித்தவ மதத்தையும் நம்பிக்கையையும் இழிவாகச் சித்தரிக்கிறது. மதமாற்றத்தைத் தவறாகச் சித்தரிப்பதுடன், மதச்சுதந்திரத்தை மதிக்காது, கிறித்தவக் கோட்பாட்டின் முக்கியக் கூறுகளை இழிவுபடுத்தியிருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பழங்குடிக் கிராமங்களைப் பின்புலமாகக் கொண்ட இப்படம், மத அடிப்படையில் பழங்குடிச் சமூகங்களைப் பிளவுபடுத்தும். இது சமூக அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்று இந்திய ஆயர்கள் கூறுகின்றனர். இப்படத்தில் மாந்திரீகம் மற்றும் கிறித்தவ மதமாற்றம் மையமாக உள்ளது. 2008-இல் கந்தமால் மாவட்ட வன்முறையின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இப்படத்தைத் தடை செய்யக் கோரும் இந்த மனுவை பிப்ரவரி 5 அன்று ஒரிசா உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.