“நாம் நமக்குள்ளேயே முடங்கிவிடாமல், நம் துன்பங்கள் அனைத்தையும் இறைவனிடம் பகிர்ந்து ஒருவருக்கொருவர் தாங்கிக்கொள்ள வேண்டும்.” -
சனவரி 31, ‘எக்ஸ்’ தளப்பதிவு
“வாழ்க்கையில் நமக்கென்று ஓர் இடம் இருக்கின்றது; நமக்கென்று ஒரு பணி இருக்கின்றது; அதை யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது; ஏனெனில் அது எப்போதும் நமக்காகவே இருக்கின்றது.”
- பிப்ரவரி 01, யூபிலி ஆண்டு
மறைக்கல்வி
உரை.
“கடவுள் நான்கு சுவர்களுக்கு மத்தியில் வாழ்பவர் அல்லர்; மாறாக, மக்கள் மத்தியில் ஒரு மனிதராக இருக்கின்றார் என்பதை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் நிகழ்வானது எடுத்துக் காட்டுகின்றது.”
- பிப்ரவரி 02, ஞாயிறு மூவேளைச்
செப
உரை
“நமது இதயங்கள் அன்பு, நம்பிக்கை, எதிர்நோக்கு என்னும் மூன்று நிலைகளில் பலப்படுத்தப்பட வேண்டும். இவை மூன்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை அம்சங்கள்; திருப்பயணிகளான நம் வாழ்க்கைப் பயணத்தில் தூய ஆவியார் நம்மை வழிநடத்தும் வழிகள் இவை.”
- பிப்ரவரி 03, திருப்பயணிகள்
சந்திப்பு
உரை
“நாம் ஒவ்வொருவரையும் ஒரே குடும்பத்தின் சகோதர சகோதரிகளாக நடத்தி, ஒன்றிணைந்து வருங்காலத்திற்காக உழைப்போம், உண்மையான செல்வம் என்பது மக்களிலும் அவர்களுடன் நாம் கொள்ளும் உறவிலும் காணக்கிடக்கிறது.”
- பிப்ரவரி 04, ‘எக்ஸ்’ தளப்பதிவு