36-வது இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) தலைவராக மீண்டும் கர்தினால் ஃபிலிப் நேரி ஃபெரோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு ஆயர் பீட்டர் மச்சாடோ துணைத் தலைவராகவும், ராஞ்சி ஆயர் வின்சென்ட் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத்
தேர்தல்கள், புவனேஸ்வரில் உள்ள XIM பல்கலைக்கழகத்தில்
நடைபெற்றது. கர்தினால் ஃபெரோ 2019-ஆம் ஆண்டில் சென்னை நகரில் நடந்த 31-வது பிளீன பேரவையில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் 2023 -இல் நடந்த 34 -வது பேரவையில் இரண்டாவது முறையாகவும், தற்பொழுது மூன்றாவது முறையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.