தமிழ்நாடு துறவியர் பேரவை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் கிராம மக்கள் இணைந்து 02.07.2025 அன்று மாலை 4 மணி அளவில் ஸ்ரீ ஆகாச பைரவ பீட குளத்தைத் தூர்வாரி, நீர் வளங்களைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இப்பணியில் பொதுமக்கள், குழந்தைகள், விவசாய முன்னேற்றச் சங்கத் தலைவர் திரு. துரை மற்றும் பொறுப்பாளர்கள், தமிழ்நாடு துறவியர் பேரவையின் தலைவர் அருள்சகோதரி மரிய பிலோமி மற்றும் துறவியர் பலரும் இணைந்துகொண்டனர். இயற்கை வளங்களைக் காப்பது என்பது மனிதகுலம் அனைத்திற்கும் மாபெரும் பொறுப்பும் கடமையும் ஆகும் என்பதைத் தமிழ்நாடு துறவியர் பேரவையின் ‘மண்ணைக் காக்கும் பேரியக்கம்’ உணர்த்தியுள்ளது.