“ஆங்கில மொழி என்பது அணை கிடையாது; அது ஒரு பாலம். ஆங்கிலம் அவமானம் அல்ல; அது அதிகாரம் அளிப்பது. ஆங்கிலம் சங்கிலி அல்ல; சங்கிலியை உடைக்கும் கருவி. இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உண்டு. நாம் அவற்றைப் போற்றவேண்டும். அதே நேரத்தில், ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்கவேண்டும். உலகத்துடன் போட்டியிடுவதற்கான பாதை அதுதான்.”
- உயர்திரு. இராகுல் காந்தி,
காங்கிரஸ் எம்.பி.
எதிர்க்கட்சித்
தலைவர்
“இந்தியாவில் அரசமைப்புச் சட்டமே உயர்வானது. அரசு நிர்வாகம், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட சனநாயகத்தின் மூன்று தூண்களும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படுபவை மட்டுமே. மேலும், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு மட்டுமே நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. மாறாக, அதன் அடிப்படைக் கட்டமைப்பை நாடாளுமன்றத்தால் மாற்ற இயலாது. நீதித்துறைக்கு அதிகாரம் மட்டுமல்ல பொதுமக்களின் உரிமைகள், அரசமைப்புச் சட்ட மதிப்பீடுகள் மற்றும் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் கடமையும் உள்ளது.”
- மாண்புமிகு பி.ஆர்.
கவாய்,
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி
“தமிழர்களின் தொன்மை வெளி உலகுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே, தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழாய்வு பற்றிய உண்மைகள் தொடர்ந்து மறைக்கப்படுகின்றன. நல்ல வேளையாகக் கீழடியில் நடைபெற்ற அகழாய்வைத் தொடர்ந்து அங்குக் கிடைத்த பொருள்களின் காலம் கி.மு. ஆறாம்
நூற்றாண்டு என்பதைத் தமிழ்நாடு அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை நிலைநாட்டியுள்ளது. இந்த ஆய்வு இன்னமும் தொடரவேண்டும். தொடர்ந்தால் இந்தியாவின் ஆதிக்குடிகள் தமிழர்களே என்ற உண்மை நிலை நிறுத்தப்படும்.”
- உயர்திரு. பழ. நெடுமாறன்,
தலைவர், உலகத் தமிழர்
பேரமைப்பு