news-details
உலக செய்திகள்
காசா மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட அழைப்பு

2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இஸ்ரேல் தாக்குதல்களால் 57,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 11,000 பேர் காணாமல் போய் உள்ள நிலையில், எண்ணற்ற குழந்தைகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் காசா பகுதி மோதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனக் கத்தோலிக்க காரிதாஸ் அமைப்பு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. உலகம் முழுவதும் ஏழைகளின் பக்கம் நின்று,  பிறரன்பு மற்றும் நீதிக் காக உழைத்து வரும் கத்தோலிக்க காரிதாஸ் அமைப்பு, ஒழுக்க ரீதியுடன் கூடிய பன்னாட்டு தலைவர்களின் அவசர நடவடிக்கையைச் சார்ந்தே காசா மக்களின் வருங்காலம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.