பார்சிலோனாவின் புனித பிரான்சிஸ் தே சேல்ஸ் ஆலயத்தில், புனிதர் பட்ட நிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமராரோ, மாரிஸ்ட் சபை அருள்பணியாளர் லிக்கரியோன் அவர்களை அருளாளராக உயர்த்தப்பட்ட திருப்பலிக்குத் தலைமை ஏற்று மறையுரையாற்றினார். அருளாளர் லிக்கரியோன் பற்றிக் கூறும்போது, கல்வி என்பது வெறும் அறிவை மாற்றுவது மட்டுமல்ல; மாறாக, மற்றவர்களின் வளர்ச்சிக்குத் தன்னையே கொடுப்பதை உள்ளடக்கிய உண்மையான அன்புப் பணியைச் செய்தார் என்று உரைத்தார்.